ஆசிய கோப்பை: இந்திய அணியின் பந்து வீச்சுக்கு தாக்குபிடிக்காத பாகிஸ்தான்: 129 ரங்களுக்குள் சுருண்டது..!
Pakistan scored 129 runs without attacking Indias bowling in the Asia Cup league match
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி ஏற்கனவே நடைபெற்ற முடிந்த முதலாவது லீக் போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணியை 09 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது.
உலக முழுவதுமே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, இந்தியா - பாகிஸ்தான் லீக் ஆட்டம் இன்று பல எதிர்ப்புக்களுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு களமிறங்கியது.
இதையடுத்து, பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக சையிம் ஆயுப், பர்ஹான் களமிறங்கினர். முதல் ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீசிய பதில் ரன் எதுவும் எடுக்காமல் சையிம் ஆயுப் (0 ரன்) கேட்ச் மூலம் ஆட்டமிழந்தார். இதையடுத்து முகமது ஹாரிஸ் களமிறங்கினார்.

அப்போது 02-வது ஓவரை பும்ரா வீசிய நிலையில் 03 ரன்கள் எடுத்திருந்த முகமது 1.2 ஓவரில் பும்ரா பந்து வீச்சில் கேட்ச் மூலம் அவரும் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய பர்ஹான் 40 ரங்களில் குலதீப் யாதவின் பந்து வீச்சில், ஹர்திக் பாண்டியவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து, பகர் சமான் 17 ரன்னிலும், சல்மான் 03 ரன்கள், ஹாசன் நவாஸ் 05 ரன்கள், மொஹமட் நவாஸ் (0), பாஹிம் அஷ்ரப் 11 ரன்கள், ஷாஹீன் ஷான் அபிரிட்டி 33 ரன்கள் காட்டமளிக்காமலும், 09 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்களை எடுத்துள்ளனர்.
இந்திய அணி சார்பில், அபராமம பந்து வீசிய குல்தீப் யாதவ், 03 விக்கெட்டுகள், ஹர்திக் பாண்டியா, வருண் சக்கரவர்த்தி தலா 01, பும்ரா மற்றும் அக்சர் பட்டேல் தலா 02 விக்கெட்டுகள் வீழ்த்துள்ளனர்.
English Summary
Pakistan scored 129 runs without attacking Indias bowling in the Asia Cup league match