ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள்; 2 தங்கம் வென்று வரலாறு படைத்த நிஷாத் குமார்; 35 பதக்கங்களுடன் 06 இடத்தில் இந்தியா..!
Nishad Kumar makes history by winning 2 gold medals at the Asian Para Games
ஜப்பானின் அயிச்சி நகோயாவில் 05 வது ஆசிய பாரா போட்டிகள், 18-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாகத் தொடங்கின. வரும் அக்டோபர் 24-ஆம் தேதி நிறைவடையும் இந்தத் தொடரில் 45 நாடுகளைச் சேர்ந்த 3,000 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
அதன்படி 2026-ஆம் ஆண்டுக்கான ஆசிய பாரா விளையாட்டில் இந்திய வீரர் நிஷாத் குமார் உயரம் தாண்டுதலில் இரண்டாவது தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். இந்தியா இதுவரை 09 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளன.
இதற்கு முன்பாக இரண்டு இந்தியர்கள் ஒரே எடிஷனில் இரண்டு தங்கம் வென்றுள்ளார்கள். இந்த வரிசையில் நிஷாத் குமார் மூன்றாவது வீரராக இணைந்துள்ளார்.
நேற்று (திங்கள் கிழமை) நடந்த நீளம் தாண்டுதலில் நிஷாத் குமார் தங்கம் வென்றிருந்தார். தற்போது இன்று (செவ்வாய்க்கிழமை ) நடந்த உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
ஆடவருக்கான டி47 உயரம் தாண்டுதல் நிஷாத் குமார் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இதில் புதிய சாதனையையும் படைத்துள்ளார். அதாவது, 2.04 மீட்டருக்கு உயரம் தாண்டி இந்தப் பிரிவில் வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
டி47 என்பது கைகளின் குறைபாடு கொண்ட தடகள வீரர்களைக் குறிப்ப்பதாகும். நிஷாத்தின் வலது கை, அவரது 06 வயதில் புல் வெட்டும் இயந்திரத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டதால் பாதி கையை இழந்துள்ளார். அவர் ஹிமாசலப் பிரதேசத்தில் ஒரு விவாசாயி குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
02-ஆம் நாள் (அக்டோபர் 20) நிலவரப்படி, இந்தியா 35 மொத்தப் பதக்கங்களுடன் (09 தங்கம், 11 வெள்ளி, 15 வெண்கலம்) ஒட்டுமொத்த தரவரிசையில் 6வது இடத்தில் உள்ளது.
English Summary
Nishad Kumar makes history by winning 2 gold medals at the Asian Para Games