ஆசிய பாரா விளையாட்டு போட்டி; தடகளத்தில் அசத்திய சிம்ரன் ஷர்மா; 9 வது தங்கத்தை தட்டித் தூக்கிய இந்தியா..!
India secures its 6th gold medal with Simran Sharma winning in athletics
மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கான 05-வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் அயிச்சி நகோயாவில் அக். 18 அன்று தொடங்கின.
வரும் அக்டோபர் 24-ஆம் தேதி நிறைவடையும் இந்தத் தொடரில் 45 நாடுகளைச் சேர்ந்த 3,000 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தியாவின் பாரா ஓட்டப்பந்தய வீராங்கனையான சிம்ரன் ஷர்மா 2026 ஆண்டுக்கான ஆசிய பாரா விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
இன்று நடைபெற்ற மகளிர் 200 மீட்டர் T12 போட்டியில் தடகள வீராங்கனை சிம்ரன் ஷர்மா, 24.80 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். (T12 பிரிவு என்பது மிதமான பார்வைக் குறைபாடு உள்ள விளையாட்டு வீரர்களுக்கானது.)
ஈரானின் ஹஜார் சஃபர்சாதே 25.02 விநாடிகளில் இரண்டாம் இடம்பிடித்த நிலையில், 25.23 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து இந்தியாவின் தேஜல்பன் டாமோர் மூன்றாம் இடம்பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். இதன்மூலம், 200மீ தடகளத்தில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
தேஜல்பன் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும். கடந்த 2024 பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சிம்ரன், ஆசியப் போட்டிகளில் 24.46 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து சாதனைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். ஆனால், இந்த முறை அவரது சாதனையை அவரே முறியடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியா விளையாட்டுப் போட்டிக்கு 168 தடகள வீரர்களைக் கொண்ட வலுவான குழுவை அனுப்பியுள்ளது. 02ஆம் நாள் (அக்டோபர் 20) நிலவரப்படி, இந்தியா 35 மொத்தப் பதக்கங்களுடன் (09 தங்கம், 11 வெள்ளி, 15 வெண்கலம்) ஒட்டுமொத்த தரவரிசையில் 06-வது இடத்தில் உள்ளது.
English Summary
India secures its 6th gold medal with Simran Sharma winning in athletics