#IPL2022 : பரபரப்பான போட்டியில் குஜராத்தை வீழ்த்தி மும்பை த்ரில் வெற்றி.! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 51வது லீக் போட்டியில் குஜராத் ரைடர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக இஷன் கிஷன் 45 ரன்களும், ரோகித் சர்மா 43 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய டிம் டேவிட் இருபத்தி ஒரு பந்தில் 44 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அதனைத் தொடர்ந்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி நீக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் மும்பை அணி 5 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இரண்டாவது வெற்றியாகும்.

அந்த அணியில் அதிகபட்சமாக சுமார் சுப்மன் கில் 52 ரன்களும், விருத்திமான் சஹா 55 ரன்களும் எடுத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mumbai Indians won by 5 runs against Gujarat Titans


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->