சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை.!
MS Dhoni leg knee surgery successful
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஐபிஎல் தொடர் தொடரின் தொடக்கத்திலேயே முழங்காலில் காயம் ஏற்பட்டது. ஆனால் அவர் முதற்கட்ட சிகிச்சை எடுத்துக் கொண்டு தொடர்ந்து விளையாடினார். ஆனால் அவர் இயல்பாக விளையாட முடியாமல் அவதிப்பட்டதை காண முடிந்தது.
மேலும் இந்த காயத்துடன் சிரமப்பட்டு விளையாடி அணியை இறுதி போட்டி வரை வழிநடத்தி சென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்தார்.

இந்த நிலையில் இறுதி போட்டி முடிந்த பிறகு தோனிக்கு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே மருத்துவரின் பரிந்துரைப்படி அறுவை சிகிச்சை செய்து கொள்வேன் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தோனிக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் நல்ல உடல் தகுதியுடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
MS Dhoni leg knee surgery successful