'தல' என்று அழைக்கும் ரசிகர்கள்! அதற்கு தோனி சொன்ன வார்த்தையை பார்த்தீங்களா? - Seithipunal
Seithipunal


ரசிகர்கள் என்னை தல என்று அழைக்கும்போது, அன்பை பிரதிப்பலிக்கிறது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நிறைவடைந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின்னர் விளையாடாமல் இருந்து வருகிறார் கேப்டன் தோனி.

வரும் மார்ச் 29-ம் தேதி தொடங்க உள்ள ஐபிஎல் டி20 போட்டி தொடருக்கு தயாராகும் விதமாக சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று பயிற்சியை தொடங்கினார். இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தோனி சில விஷயங்களை பேசியுள்ளார்.

அதில் தோனி கூறியதாவது, சென்னை அணிக்கும் எனக்குமான இந்தப் பயணம் கடந்த 2008-ல் தொடங்கியது. எப்போதும் என்னை ‘தல’ என்று அழைக்கும் அவர்கள் என்னைப் பெயர் சொல்லி கூட யாரும் அழைக்கமாட்டார்கள். 

சகோதரன் என்ற பாசத்தில் `தல’ என்று அழைக்கும் போதெல்லாம், அவர்கள் எனக்கு கொடுக்கும் மரியாதையையும் அன்பையும் காட்டுகிறது. சென்னை மட்டுமல்ல தென்னிந்தியா பக்கம் வந்தாலே இங்கே யாரும் என்னைப் பெயர் சொல்லி அழைப்பதில்லை 'தல' என்றுதான் அழைப்பார்கள்" என தோனியும் பாசமழை பொழிந்துள்ளார். 

சென்னை அணி பல வழிகளில் என்னுடைய முன்னேற்றத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது. களத்தில் மற்றும் வெளியே ஒரு மனிதனாக, கிரிக்கெட் வீரராகக் கடினமான சூழ்நிலைகளைக் கையாள்வது மற்றும் சிறப்பாகச் செயல்பட்டவுடன் எவ்வாறு தாழ்மையுடன் இருப்பது போன்ற கலையைக் கற்றுக்கொள்ள உதவியது சென்னை சூப்பர் கிங்ஸ் தான் என கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MS Dhoni about CSK with His experience


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->