நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து முழுவதுமாக விலகிய மேக்ஸ்வெல்..!
Maxwell has completely withdrawn from the current IPL series
இந்திய உள்ளூர் கிரிக்கெட் போட்டியான ஐபிஎல் போட்டியின் 18-வது சீசன் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் 49-வது போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மாதானத்தில் நடைபெற்றது. இதில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்று, இந்த முறை வெறும் 04 புள்ளிகளை மற்றும் பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன், பஞ்சாபி கிங்ஸ் அணி மோதியது. இந்த போட்டியில், பஞ்சாப் வீரர் மேக்ஸ்வெல் விளையாடவில்லை.
இவர் நடப்பு தொடரில் இதுவரை 07 போட்டிகளில் விளையாடி 48 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அத்துடன், 13 ஓவர்கள் பந்துவீசி 04 விக்கெட்டுகளை மாத்திரம் வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில்,கை விரலில் ஏற்பட்டுள்ள எலும்பு முறிவு காரணமாக நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து முழுமையாக விளக்கியுள்ளதாக அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த போட்டியில் மட்டுமல்ல எஞ்சியுள்ள 2025 ஐபிஎல் தொடரில் இருந்தே மேக்ஸ்வெல் வெளியேறியுள்ளார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. மேக்ஸ்வெல்லுக்கு பதிலாக சூர்யன்ஷ் ஷெட்ஜ் களமிறங்குவார் என பஞ்சாப் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
நேற்று நடைபெற்ற சிஎஸ்கே உடனான போட்டியில் வெற்றிப்பெற்றதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 02-வது இடத்துக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
English Summary
Maxwell has completely withdrawn from the current IPL series