லக்னோ அணிக்கு பெயர் என்ன தெரியுமா.? வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


லக்னோ அணிக்கு புதிய பெயர் வைத்து அந்த அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஐபிஎல் 14 வது சீசன் முடிந்த உடன் புதிய இரண்டு அணிகள் இணைக்கப்பட்டு, 15 வது சீசன் முதல் மொத்தம் 10 அணிகள் களமிறக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்தது. இந்த புதிய 2 அணிகளை ஏலம் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்று முடிந்தது. அதில் லக்னோ, அகமதாபாத் அணிகள் தேர்வு செய்யப்பட்டது. 

இந்த புதிய இரண்டு அணிகளுக்கு தரமான வீரர்கள் கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக, மெகா ஏலத்திற்கு முன்பு பழைய 8 அணிகளும் விதிமுறைக்கு உட்பட்டு 4 பேரை தக்க வைக்க வேண்டும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது. அதன்படி அனைத்து அணிகளும் வீரர்களை தக்க வைத்தனர். 

இதையடுத்து, லக்னோ, அகமதாபாத் அணிகள் இரண்டு உள்நாட்டு வீரர்களையும், ஒரு வெளிநாட்டு வீரரையும் தக்க வைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியது. அதன்பிறகு  அகமதாபாத் அணியில் ஹார்திக் பாண்ட்யா (கேப்டன்), ரஷித் கான், சுப்மான் கில் ஆகியோரை தக்கவைத்துள்ளது. ஹர்திக் பாண்டியா மற்றும் ரஷித் கான் இருவரும் தலா 15 கோடிக்கும், சுப்மான் கில் 8 கோடிக்கும் எடுக்கப்பட்டுள்ளது.

லக்னோ அணியை பொறுத்தவரை கேஎல் ராகுல் கேப்டனாகவும், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ரவி பிஷ்னோய் ஆகியோரை தக்கவைத்துள்ளது. கேஎல் ராகுல் 17 கோடிக்கும், மார்கஸ் ஸ்டாய்னிஸ் 9.2 கோடிக்கும், ரவி பிஷ்னோய் 4 கோடிக்கும் தக்க வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், லக்னோ அணிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் என்ற புதிய பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள சஞ்சீவ் கோயங்கா, ரசிகர்கள்தான் இந்த பெயரை சூட்டினார்கள். வழக்கம்போல் அணிக்கு ஆதரவளித்து, ஆசீர்வதியுங்கள் என தெரிவித்துள்ளார். சஞ்சீவ் கோயங்கா புனே அணியை வாங்கிய போது அந்த அணிக்கு ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் என்ற பெயர் சூட்டி இருந்தார். தற்போது அதே பெயரை லக்னோ அணிக்கும் வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lucknow team name is luckow super giants


கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?
Seithipunal