பலம் வாய்ந்த லக்னோ அணியை எதிர் கொள்ளப்போகும் பஞ்சாப் கிங்ஸ்.. வெற்றி யாருக்கு.? - Seithipunal
Seithipunal


ஐபிஎல் 15 வது சீசனில் இன்று 42வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகிறது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிய பொறுத்தவரை லோகேஷ் ராகுல், குயின்டான் டி காக், தீபக் ஹூடா, ஸ்டோனிஸ் நல்ல பார்மில் உள்ளனர்.

லக்னோ அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்று, 3 போட்டிகளில் தோல்வி அடைந்து, புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணியை பொறுத்தவரை பொருத்தவரை கேப்டன் மயங்க் அகர்வால் ஒரு போட்டியில் மட்டும் அரைசதம் அடித்தார். மற்ற போட்டிகளில் பெரிய அளவில் ரன்களை குவிக்க வில்லை. வலுவான தொடக்கம் கிடைக்க அவர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். பஞ்சாப் அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடிய 4 போட்டிகளில் வெற்றி பெற்று, நான்கு போட்டிகளில் தோல்வியடைந்து, புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. 

புள்ளி பட்டியலில் முன்னேற இரு அணிகளுக்கும் இன்றைய போட்டி முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக இது கருதப்படுகிறது. இன்று புனே மைதானத்தில் லக்னோ சூப்பரா லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

LSG vs PBKS Match Today


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->