ஐசிசியின் டெஸ்ட் தரவரிசை பட்டியல்.. சரிவை சந்தித்த ஜடேஜா மற்றும் விராட் கோலி.!! - Seithipunal
Seithipunal


டெஸ்ட் போட்டியில் சிறந்த பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர், ஆல்ரவுண்டர்களின் தரவரிசைப் பாலியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. 

அதன்படி, டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் முதல் 5 இடங்களுக்குள் திமுத் கருணாரத்ன நுழைந்தார். பேட்டிங் தரவரிசையில், இலங்கை டெஸ்ட் கேப்டன் திமுத் கருணாரத்னே பெங்களூரில் இரண்டாவது இன்னிங்ஸில் 107 ரன்களுக்கு போராடிய பிறகு, சிறந்த நம்பர்.5 ஆக உயர்ந்தார்.

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 8 வது இடத்திலே தொடர்கிறார். விராட் கோலி ஒன்பதாவது இடத்திற்கு சரிந்தார். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 8 வது இடத்திற்கு முன்னேறினார்.  ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோர் முதல் மூன்று இடங்களை தக்கவைத்துள்ளனர். ஸ்ரேயாஸ் ஐயர் 40 இடத்தில் இருந்து 37வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். 

இந்த மாத தொடக்கத்தில் மொஹாலி டெஸ்டில் 175 ரன் மற்றும் ஒன்பது விக்கெட்டுகளுக்குப் பிறகு நம்பர் 1 க்கு உயர்ந்திருந்த ரவீந்திர ஜடேஜாவை பின்னுக்கு தள்ளி ஆல்-ரவுண்டர்கள் பட்டியலில், ஜேசன் ஹோல்டர் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ரவிச்சந்திரன் அஷ்வின், ஷாகிப் அல் ஹசன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் முதல் ஐந்து இடங்களுக்குள் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kohli slips to ninth among


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->