இவர் கேட்டுக் கொண்டதால்தான் ஓய்வு பெறவில்லை.. தோனி குறித்து வெளியான சுவாரஸ்ய தகவல்கள்.!! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த உலக கோப்பை தொடரின் அரையிறுதியில், தோல்வியின் விளிம்பில் இருந்த இந்திய அணியை வெற்றியின் விளிம்பு வரை கொண்டு சென்றவர் தோனி. ஆனால் துரதிஷ்டவசமாக டோனி ரன் அவுட் ஆனதால், இந்திய அணி தோல்வி அடைந்த உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது. 

இதைத்தொடர்ந்து தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் என்று கூறப்பட்ட நிலையில், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். 

நேற்று முன் தினம் அறிவிக்கப்பட்ட மேற்கிந்திய தீவு தொடருக்கான இந்திய அணியில் தோனி பெயர் இடம்பெறவில்லை. தோனி இரண்டு மாதகாலம் ராணுவ பயிற்சியில் ஈடுபட போவதாகவும், அதனால் இந்த தொடரில் இருந்து இரண்டு மாத காலம் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில்,  தோனி உலக கோப்பை தொடருடன் ஓய்வு பெற வேண்டும் என்ற முடிவில் தான் இருந்தாராம். ஆனால் இந்திய அணியின் கேப்டன் கோலி கேட்டுக்கொண்டதால் ஓய்வு முடிவை தள்ளி போட்டதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து விராட் கோலியின் நெருங்கிய வட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர் கூறுகையில், உலக கோப்பை தொடருக்குப் பிறகு ஓய்வு பெற முடிவில் தோனி இருந்தார். ஆனால் இப்போது ஓய்வு பெறவேண்டும், கொஞ்சம் காத்திருங்கள் என்று கோலி கேட்டுக் கொண்டதால்தான் தோனி தன் முடிவை மாற்றிக் கொண்டார். 

தோனிக்கு உடல்தகுதி பிரச்சினை எதுவுமில்லை. அணிக்கு தேவை என்றால் வரும் உலக கோப்பை டி20 தொடர் வரை அவரால் சிறப்பாக விளையாட முடியும் என்று கூறினார்.
 

English Summary

Kohli plan for dhoni retirement


கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
Seithipunal