ODI கிரிக்கெட்டில் பேட்டிங் சராசரியில் தோனியை பின்னுக்கு தள்ளி கேஎல் ராகுல் அசத்தல்..!
KL Rahul surpasses Dhoni in batting average in ODI cricket a remarkable achievement
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நியூசிலாந்து அணி 03 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
முதல் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில், இந்தியா வெற்றிபெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான 02-வது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடந்து வருகிறது.
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 07 விக்கெட்டுகள் இழப்பிற்கு 284 ரன்கள் சேர்த்துள்ளது. 118 ரன்னுக்கு 04 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியது. அப்போது கேஎல் ராகுல் நிதனாமாகவும், பொறுப்பாகவும், ஆடி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 92 பந்தில் 112 ரன்கள் அடித்து அசத்தினார். அதில் 11 பவுண்டரிகளும் 1 சிக்சரும் அடங்குகின்றது.
கே.எல். ராகுல், கடைசி 04 ஒருநாள் போட்டிகளில் இரண்டு அரைசதம், ஒரு சதம் என விளாசி உள்ளார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தன்னுடைய பேட்டிங் சராசரியை 50-க்கு மேல் உயர்த்தியுள்ளார். இதன்மூலம் அதிக பேட்டிங் சராசரி வைத்திருக்கும் இந்திய வீரர்கள் பட்டியலில் தோனியை பின்னுக்கு தள்ளியுள்ளார்.
இந்திய வீரர்களை பொறுத்தவரையில் ஒருநாள் போட்டிகளில் சராசரி;
கோலி (58.45), கில் (56.34), கேஎல் ராகுல் (51.67), தோனி (50.23) என 50-க்கு மேல் பேட்டிங் சராசரி கொண்டுள்ளனர்.
English Summary
KL Rahul surpasses Dhoni in batting average in ODI cricket a remarkable achievement