நேற்றைய போட்டியில் மிக மோசமான சாதனையை படைத்த பொல்லார்ட்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். 

இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய பந்துவீச்சாளர்களை தாக்குப்பிடிக்க முடியாமல் வெறும் 176 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு களமிறங்கிய கோலி 8 ரன்களில் வெளியேறினார். இஷான் கிஷன் 28 ரன்னுக்கும், ரிஷப் பண்ட் 11 ரன்னுக்கும் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 

அதன்பிறகு சூர்யகுமார் யாதவ் - தீபக் ஹூடா கூட்டணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 26 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1 - 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், இந்த போட்டியில் தான் சந்தித்த முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட். இதன்மூலம் மோசமான சாதனைக்கு ஒன்றுக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் பொல்லார்ட் 15வது முறையாக நேற்று டக் அவுட் ஆனார்.  ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக முறை டக் அவுட் ஆன வெஸ்ட் இண்டீஸ் வீரர்களில்  26 முறை டக் அவுட் ஆகி கிறிஸ் கெயில் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.  பொல்லார்டு 2ம் இடம் பிடித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kieron pollard new record


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->