ஐ.எஸ்.எல்.கால்பந்து போட்டி! ஒடிஷாவை வீழ்த்தியது ஜாம்ஷெட்பூர்.! - Seithipunal
Seithipunal


ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் ஒடிசா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றது.

8 அணிகள் பங்கேற்கும் ஐஎஸ்எல் கால்பந்து போட்டித்தொடர் கோவாவில் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அணியும் ஒடிஷா அணியும் மோதின. புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ஜாம்ஷெட்பூர் அணி ஆரம்பம் முதலே மிகுந்த ஆதிக்கத்துடன் விளையாடியது. ஜாம்ஷெட்பூர் அணி சார்பில் சிமா 23 மற்றும் 26-வது நிமிடங்களில், அடுத்தடுத்து கோல் அடித்து அமர்த்தினார். ஒடிஷா அணி சார்பில் பால் 45-வது நிமிடத்தில் கோல் அடித்தார். அதற்குப் பிறகு ஒடிஷா கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஜாம்ஷெட்பூர் அணி சார்பில் 54-வது நிமிடத்தில் ரித்விக்கும், 73வது நிமிடத்தில் ஜோர்டான் முரேவும், மற்றும் 87வது நிமிடத்தில் இஷான் பண்டிதவும் தலா ஒரு கோல் அடிக்க ஆட்டநேர முடிவில் ஜாம்ஷெட்பூர் அணி 5 - 1 என்ற கணக்கில் ஒடிசாவை வீழ்த்தியது. ஏற்கனவே அரை இறுதிக்கு தகுதி பெற்ற ஜாம்ஷெட்பூர் அணி இந்த வெற்றியின் மூலம் மேலும் அதிக புள்ளிகளை பெற்று தனது இடத்தை மேலும் வலுவாக்கிக் கொண்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ISL Odisha Jamshedpur


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->