ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி! மும்பையை வீழ்த்திய ஹைதராபாத் அணி.! - Seithipunal
Seithipunal


ஐஎஸ்எல் கால்பந்து போட்டி தொடரில் தனது கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடிய ஹைதராபாத் அணி மும்பையை வீழ்த்தியது.

11 அணிகள் பங்கேற்றுள்ள ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டித் தொடர் கோவாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற பரபரப்பான லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 2-1 என்ற கோல் கணக்கில் மும்பை அணியை வீழ்த்தியது.

ஹைதராபாத் அணி சார்பில் ஆட்டத்தின் 14-வது நிமிடத்திலும், 41-வது நிமிடத்திலும் கோல் அடிக்கப்பட்டது. முதல் பாதி முடிவில் ஹைதராபாத் அணி 2-0 என்று முன்னிலை பெற்றிருந்தது.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில், 76 வது நிமிடத்தில் மும்பை அணி சார்பில் ஒரு கோல் அடிக்கப்பட்டது. அதன் பிறகு ஆட்டம் விறுவிறுப்பு அடைந்தது. இரு அணி வீரர்களும் கோல் அடிக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனாலும் இரு அணி வீரர்களும் தடுப்பு ஆட்டத்திலேயே அதிக கவனம் செலுத்தியதால் கோல் அடிக்க முடியவில்லை. கூடுதலாக 5 நிமிடங்கள் வழங்கப்பட்டும் இரு அணி வீரர்களாலும் கோல் அடிக்க முடியவில்லை.

ஆட்டநேர முடிவில் ஹைதராபாத் அணி 2-1 என்ற கோல் கணக்கில் மும்பை அணியை வீழ்த்தியது.

புள்ளி பட்டியலில் ஹைதராபாத் அணி 11 வெற்றிகளுடன் 2-வது இடத்திலும் மும்பை அணி 9 வெற்றிகளுடன் 5-வது இடத்திலும் நீடிக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ISL football Hyderabad beats Mumbai


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->