நாளை மீண்டும் தொடங்கும் ஐ.பி.எல்.: RCB - KRR போட்டி நடைபெறுவதில் சிக்கல்..?
IPL to resume tomorrow RCB and KKR match in trouble
18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தது. இந்தியா பாகிஸ்தான் ஏற்பட்ட போர்ப்பதற்றம் காரணமாக ஐ.பி.எல். தொடரின் லீக் போட்டிகள் ஒரு வார காலம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தியா- பாகிஸ்தான் மோதல் தற்காலிகமாக முடிவுக்கு வந்ததுள்ளது. இதனால், பாதியில் நிறுத்தப்பட்ட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நாளை (சனிக்கிழமை) மீண்டும் தொடங்குகிறது. இதன் அடிப்படையில், பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நாளை இரவு 07.30 மணிக்கு நடக்கும் 58-வது லீக் ஆட்டம் நடைபெறவுள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பல பரீட்சை நடத்தவுள்ளன.

இது வரை நடந்து முடிந்த போட்டிகளின் அடிப்படையில், புள்ளி பட்டியலில் பெங்களூரு அணி 16 புள்ளிகளுடன் 02-வது இடத்தில் உள்ளது. நாளை நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்து விடும். மறுபுறம் நடப்பு சாம்பியன் ஆன கொல்கத்தா அணி 12 போட்டிகளில் விளையாடி வெறும் 11 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது. பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்க வைக்க மீதமுள்ள 02 போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.
இந்நிலையில் இந்த ஆட்டம் திட்டமிட்டபடி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் பெங்களூருவில் நேற்று முதல் கன மழை பெய்து வருகிறது. மழை நாளை வரை நீடிக்கும் என வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்ற நிலையில், இந்த போட்டி தடையின்றி நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் ஆர்.சி.பி.ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.
English Summary
IPL to resume tomorrow RCB and KKR match in trouble