ஐபிஎல் போட்டிகளை நடத்துவது சிக்கல்.. வெளியான அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 9-ஆம் தேதி தொடங்கி, ரசிகர்கள் இன்றி தடுப்பு நடவடிக்கைகளுடன் நடைபெற்று வருகிறது. சென்னை, மும்பையில் நடைபெற்ற போட்டிகளில் தற்போது டெல்லி, அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி ரத்து செய்யப்பட்டது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் வாரியர் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதனால் நேற்று இரவு அகமதாபாத்தில் நடைபெற இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி தள்ளி வைக்கப்பட்டதாக இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று மதியம் அறிவித்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளரும், முன்னாள் வீரர்கள் எல்.பாலாஜி மற்றும் அந்த அணியின் பஸ் கிளீனர் ஆகியோருக்கு நேற்று முன்தினம் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. 

இதையடுத்து, கொல்கத்தா மற்றும் சென்னை அணி வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. அத்துடன் அவர்களுக்கு தினசரி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு மத்திய எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை ஒரே மைதானத்தில் நடத்துவது குறித்து பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மும்பையில் 3 மைதானங்கள் இருப்பதால் அங்கு போட்டிகளை நடத்துவது குறித்து பிசிசிஐ அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ipl match for corona issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->