சென்னை அணியில் இவரா?! அனைத்து அணிகளும் கைதட்டி பாராட்டிய வீரர்.!  - Seithipunal
Seithipunal


இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 2021 சீசனுக்கான வீரர்கள் ஏலம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் இந்திய டெஸ்ட் அணியின் மிகச் சிறந்த பேட்ஸ்மேனான புஜாராவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 50 லட்சம் கொடுத்து தங்கள் வசப்படுத்தியது.

இந்திய வீரர் புஜாரா ஐபிஎல் போட்டியில் விளையாட ஆர்வமாக உள்ளதாக தெரிவித்து வந்த நிலையில், இந்த சீசனில் அவர் விளையாடுவது உறுதியாகியுள்ளது. 

கடந்த சில ஐபில் சீசனில் எந்த அணியும் புஜாராவை ஏலம் எடுக்க ஆர்வம் காட்டவில்லை. கடந்த 2019 ஆம் ஆண்டு புஜாரா ஒரு பெட்டியில், "என்னால் டி20 போட்டியில் அதிரடியாக ஆட முடியும். நான் ஐபிஎல் விளையாட ஆர்வமாக உள்ளேன்" என்று தெரிவித்து இருந்தார்.

இருப்பினும் அவரை எந்த அணியும் எடுக்க முன்வரவில்லை. இந்த நிலையில் இன்றைய ஏலத்தின்போது புஜாரா பெயர் அறிவிக்கப்பட்டு 50 லட்சம் ரூபாய் அடிப்படை விலையில் ஏலம் விடப்பட்டது. அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அடிப்படை விலையான 50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

அப்போது ஏலத்தில் பங்கேற்ற அனைத்து அணியும் கைதட்டி வாழ்த்து தெரிவித்தது. உண்மையை சொல்ல போனால் புஜாராவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தைரியத்தை தான் அங்கிருந்த மற்ற அணியைச் சேர்ந்தவர்கள் கைத்தட்டி பாராட்டினர் என்றே தெரிகிறது. 

நம்பிக்கை வைத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புஜாரா ஒரு அதிரடி மன்னனாக களமிறங்கி தன் மீதான விமர்சங்களை தவிடு போடி ஆக்குவார் என்று சென்னை ரசிகர்கள் புஜாராவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் அவரின் ஆட்டத்தில் எந்த குறையும் சொல்ல முடியாது. தன்னால் முடிந்த அளவு இந்திய அணிக்கு சிறந்த பங்கேற்பை அளித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ipl csk pujara


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal