#IPL2023 : ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. மழை பெய்தாலும் நோ பிராப்லம்.. நாளை தொடங்கும் போட்டி.! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் இறுதிப் போட்டி இன்று தடைபட்டால் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் அனைத்து போட்டிகளும் முடிவடைய உள்ள நிலையில், இன்று இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இதில் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

இதனையடுத்து கடந்த 24ம் தேதி நடைபெற்ற குவாலிஃபயர் 1 போட்டியில் குஜராத்தை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் லக்னோவை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி குவாலிஃபயர் 2 போட்டிக்கு முன்னேறியது.

அதனைத் தொடர்ந்து 26ம் தேதி இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற குவாலிஃபயர் 2 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்த நிலையில் இன்று இரவு அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.

இதில் ஐபிஎல் தொடரின் பலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால் ஐபிஎல் ரசிகர்களுடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மழை குறுக்கீடு

இந்த நிலையில் இறுதி போட்டி நடைபெறும் அகமதாபாத் மைதானத்தில் தற்போது இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இது ஐபிஎல் ரசிகர்களிடையே விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதன் காரணமாக தற்போது வரை டாஸ் போடாமல் போட்டி தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் ஐபிஎல் இறுதிப் போட்டி குறித்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

நாளை இறுதிப்போட்டி

அந்த வகையில் இன்று இரவு 9.40 மணிக்குள் தொடங்கினால், போட்டி முழுமையாக நடைபெறும். மேலும், இரவு 11.56 மணிக்கு தொடங்கினால் 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெறும்.

மேலும், இன்றைய இறுதிப் போட்டி நடைபெறவில்லை என்றால் போட்டி நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த செய்தி ஐபிஎல் ரசிகர்களுடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2023 final reserve day tomorrow


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->