#IPL2023 : அடுத்த சுற்றுக்கு முன்னேற்றப் போவது யார்.? மும்பை - லக்னோ இன்று மோதல்.! - Seithipunal
Seithipunal


நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், இன்று முதல் ப்ளே ஆப் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இந்த நிலையில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்த குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் வரும் மே 26ம் தேதி நடைபெறும் குவாலிஃபயர் 2 போட்டியில் விளையாடும். மேலும், இன்றைய போட்டியில் தோல்வி அடையும் தொடரில் இருந்து வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதன் மூலம் நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. மேலும், மே 26ம் தேதி நடைபெறும் குவாலிஃபயர் 2 போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டியில் விளையாடும்.

அதன் காரணமாக இன்றைய போட்டியில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேற லக்னோ மற்றும் மும்பை ஆகிய இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இன்றைய போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2023 Eliminator LSG vs MI


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->