'தவெக ஒரு வலிமையான சக்தியாகத் திகழும். அது பல ஆச்சரியங்களையும் நிகழ்த்தக்கூடும்'; வைகோ பேட்டி..! - Seithipunal
Seithipunal


தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் , மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் முடிவடைந்துள்ளது. வரும் 04ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட்டவையுள்ளன. 

இந்நிலையில், கடந்த 29 ஆம் தேதி மேற்கு வங்கத்தின் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்த பின், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. இதில், பெரும்பான்மை நிறுவனங்கள் தமிழத்தில் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் எனவும், சில கணிப்புகள் அதிமுகவிற்கு வாய்ப்பு எனவும், ஒரு நிறுவனம் (ஆக்சிஸ் மை இந்தியா) மட்டும் தவெக ஆட்சி அமைக்க வாய்ப்பு எனவும் கணிப்புகளை வெளியிட்டுள்ளன. 

இந்நிலையில் இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஏ.என்.ஐ.-க்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;

தவெக ஒரு வலிமையான சக்தியாகத் திகழும் என்றும், அது பல ஆச்சரியங்களையும் நிகழ்த்தக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார். அதாவது, மாணவர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் மத்தியில் தவெகவிற்குச் சாதகமான ஒரு வாக்கு மாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், வாக்கெடுப்புக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் ஒரே வகையில் இல்லை என்றும், நான்கு கருத்துக்கணிப்புகள் திமுகவே ஆட்சி அமைக்கும் என்று கூறுகின்றன. அதேவேளையில், ஒரு கருத்துக்கணிப்பு அதிமுக ஆட்சி அமைக்கும் என்றும், மற்றொரு கருத்துக்கணிப்பு விஜய்யின் தவெக கட்சி ஆட்சிக்கு வரும் என்றும் கணித்துள்ளன. இவ்வாறு பல்வேறுபட்ட கருத்துகள் நிலவுகின்றதால், இந்தக் கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் ஒன்றுக்கொன்று மாறுபடுகின்றன. நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும், அவர் குறிப்பிடுகையில்; திராவிட இயக்கம் தியாகம் மற்றும் துன்பத்தின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளதாகவும், திராவிட இயக்கத்தின் வளர்ச்சிக்காக ஆயிரக்கணக்கானோர் தங்கள் வாழ்நாள் முழுவதையும் தியாகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றாலும் பெறாவிட்டாலும், திராவிட மண்ணில் அது ஒரு நிரந்தர சக்தியாகவே இருக்கும் என்றும், பாஜக, அவர்கள் கற்பனை செய்வது போல, திராவிட இயக்கத்தின் அடித்தளங்களை அசைக்க முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பாஜக ஊடுருவ முயற்சிகள் கேரளாவில் மிகவும் கடினமாக இருக்கும் என்றும், அவர்களால் அங்கு இயலாது என்று கூறியதோடு, மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை, நிலைமை மாறுபட்டதாக இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளார். மேலும், நாம் பாஜகவையும், இந்துத்துவா எனும் அச்சுறுத்தலையும் எதிர்த்துப் போராட வேண்டும் என்று பேசியுள்ளார்.

அந்தக் குறிக்கோளுக்காகவே நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம் வேண்டும், நாம் உறுதியாகப் போராடுவோம். அதோடு, நாம் மிக ஆழமாக ஊடுருவிச் சென்று, தற்போது நம்மிடம் போதிய அளவில் ஈர்க்கப்படாத இளம் தலைமுறையினரிடையே வலுவாகக் காலூன்ற வேண்டும் என்றும்,  அதுவே திராவிட இயக்கத்தின் இன்றைய தேவையாகும் என்று வைகோ பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vaiko states in an interview that the TVK will emerge as a powerful force


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?


செய்திகள்



Seithipunal
--> -->