இன்போசிஸின் புதிய திட்டம்; ஆந்திராவில் 20 ஏக்கரில் நிரந்தர வளாகம்: 7,500 பேருக்கு வேலை..! - Seithipunal
Seithipunal


ஆந்​திர மாநிலம் விசாகப்​பட்​டினத்​தில் 20 ஏக்​கர் பரப்​பள​வில் புதிய நிரந்தர வளாகத்தை அமைக்க தகவல் தொழில் நுட்ப நிறுவனமாக இன்போசிஸ் திட்டமிட்டுள்ளது. இப்​பு​திய வளாகத்​தில் சுமார் 7,000 ஐடி பணியாளர்கள் பணி​யாற்​றும் வகையில் வசதி​கள் செய்​யப்​பட​வுள்​ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இன்போசிஸ் ஐ.டி நிறு​வனம் வெளி​யிட்​டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது;

ஆந்​திர மாநிலம் விசாகப்​பட்​டினத்​தில் 20 ஏக்​கரில் நிரந்தர வளாகம் அமைக்​கப்படவுள்​ளது. இப்​பு​திய வளாகத்​தில் சுமார் 7,000 ஐடி பணியாளர்கள் பணி​யாற்​றும் வகையில் வசதி​கள் செய்​யப்​பட​வுள்ளதாக கூறியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்​தத் துறை​முக நகரில் இன்போசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சி அபரிமித​மாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆரம்​பத்​தில் 250 ஊழியர்​களு​டன் தொடங்​கப்​பட்ட இந்த மையம், தற்​போது 1,900 ஊழியர்​களு​டன் இயங்கி வரு​கிறதாகவும், விரை​வில் மேலும் 7500 பேர் பணி​யாற்​று​வதற்​கான இடவச​தி​கள் தயார் செய்யப்​பட​வுள்​ளதாக குறிப்பிட்டுள்ளது.

20 ஏக்​கரில் சிறந்த ஐ.டி நிறுவனமாக அமைய​வுள்ள இந்த நிரந்தர வளாகம் இப்​பகு​தி​யின் நீண்​ட​கால வளர்ச்​சிக்​குச் சான்​றாக அமை​யும் என்றும், இந்த மையத்​திற்​காக விசாகப்​பட்​டினம் மற்​றும் அதனைச் சுற்​றி​யுள்ள பகு​தி​களில் இருந்து 1,000 புதிய பட்​ட​தா​ரி​களும், 500 அனுபவம் வாய்ந்த பணியாளர்​களும் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர் என்று இன்போசிஸ் அறிவித்துள்ளது.

அத்துடன், இது ஆந்​திர அரசின் திறன் மேம்​பாட்​டுத் திட்​டங்​களுக்​குக் கிடைத்த வெற்றியாகக் கருதப்​படுவதாகவும் தெரிவித்துள்​ளது.

இது குறித்து ஆந்​திர மாநில தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர் நாரா லோகேஷ் தெரிவித்துள்ளதாவது; வி​சாகப்​பட்​டினம் ஒரு சிறந்த ஐடி மையமாக உரு​வெடுத்து வரு​வது, அங்​குள்ள உள்​ளூர் திறமையாளர்​களின் வலிமை​யைக் காட்​டு​கிறது என்றும், ஆந்​திர மாநிலத்​தைத் தொழில்​நுட்​பம் மற்​றும் கண்​டு​பிடிப்​பு​களுக்​கான உலகளா​விய மைய​மாக மாற்​று​வதே எங்​களது நோக்​கம் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், இன்​போசிஸ் நிறு​வனத்​தின் இந்த விரி​வாக்​கம் எங்​களது கொள்கை முடிவு​களுக்​குக் கிடைத்த அங்​கீ​கார​ம் என்றும், தகவல் தொழில்​நுட்​பத் துறை​யில் ஆந்​திர மாநிலம் தனது நிலை​யைத் தொடர்ந்து வலுப்​படுத்​தி வருவதாகவும் நாரா லோகேஷ் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Infosys Permanent Campus in Andhra Pradesh Spans 20 Acres


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->