#IPL2023 : குஜராத்தை வீழ்த்தி 10வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சென்னை அணி.! 
                                    
                                    
                                   IPL 2023 CSK won against GT and into the final 
 
                                 
                               
                                
                                      
                                            நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், இன்று முதல் ப்ளே ஆப் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற குவாலிஃபயர் 1 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பௌலிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. அதனைத் தொடர்ந்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி மேலும் இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

அந்த வகையில் ஐபிஎல் தொடரில் 10 ஆவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதில், 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
                                     
                                 
                   
                       English Summary
                       IPL 2023 CSK won against GT and into the final