IPL2023 : டெல்லியை வீழ்த்தி கெத்தாக ப்ளேஆப்பில் நுழைந்த சென்னை சூப்பர் கிங்ஸ்.! - Seithipunal
Seithipunal


நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் நாளையுடன் லீக் போட்டிகள் முடிவடைய உள்ளது. இதில் தற்போது வரை குஜராத் டைட்டன்ஸ் அணி மட்டும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

மீதமுள்ள 3 இடங்களுக்கு சென்னை, லக்னோ, மும்பை, பெங்களூர், கொல்கத்தா, ராஜஸ்தான் ஆகிய அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது

அதேபோல், டெல்லி, ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் ஆகிய 3 அணிகள் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது.

இந்நிலையில் இன்று மதியம் 3.30 மணிக்கு டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற 67 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லியின் பந்துவீச்சை துவம்சம் செய்தது. இறுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் குவித்தது.

அதனைத் தொடர்ந்து 224 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 20 முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளேஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 14 போட்டியில் விளையாடி உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 போட்டிகளில் வெற்றி மற்றும் ஒரு போட்டியில் முடிவில்லை என 17 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2023 csk won against DC and qualified playoffs


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->