#IPL2023 : ஐபிஎல் நிறைவு விழா.. பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகள்.. யார் யார் பங்கேற்பு.? - Seithipunal
Seithipunal


நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், ப்ளே ஆப் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

இதனையடுத்து கடந்த 24ம் தேதி நடைபெற்ற குவாலிஃபயர் 1 போட்டியில் குஜராத்தை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் லக்னோவை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி குவாலிஃபயர் 2 போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்த நிலையில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் குவாலிஃபயர் 2 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. 

இந்த குவாலிஃபயர் 2 போட்டியில் வெற்றி பெறும் அணி வரும் மே 28ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் விளையாட உள்ளது.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நிறைவு விழா தொடக்க விழாவை போலவே பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட உள்ளது. இந்த வகையில் ஐபிஎல் நிறைவு விழா கலைநிகழ்ச்சியில் உலக பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். 

அதன்படி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபாண்டி ஐபிஎல் தொடரின் நிறைவு விழாவில் பிரபல ராப்பர் கிங், டிஜே நியூக்லியா, பாடகர்கள் டிவைன் மற்றும் ஜோனிட்டா காந்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2023 closing ceremony celebrities


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->