#IPL2023 : இறுதிகட்டத்தை எட்டும் லீக்சுற்று போட்டிகள்.. கொல்கத்தா-பஞ்சாப் அணிகள் இன்று மோதல்.! - Seithipunal
Seithipunal


16வது ஐபிஎல் சீசன் போட்டிகள் கடந்த மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, மே 28 வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெற உள்ளது. தற்போது லீக் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை 10 போட்டியில் விளையாடி உள்ள நிலையில் 5 போட்டியில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.

அதேபோல் 10 போட்டியில் விளையாடி உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 போட்டியில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும்  53வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 31ஆம் தேதி தொடங்கிய நிலையில், தற்போதைய இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் இனிமேல் நடைபெறும் லீக் போட்டியும் மிகவும் முக்கியமாகும்.

இதில் தோல்வி அடையும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது மிகவும் கடினமாக இருக்கும். அந்த வகையில் இன்றைய தினம் நடைபெறும் போட்டி பஞ்சாப் - கொல்கத்தா அணிகளுக்கு மிகவும் முக்கியமான போட்டியாகும்.

அதன் காரணமாக இன்றைய போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இன்றைய போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை நேருக்கு நேர்

இவ்விரு அணிகளும் இதுவரை 31 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், 20 போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், 11 போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2023 53rd match KKR vs PBKS


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->