ஐபிஎல் 2021 : ஷார்ட் லிஸ்டிலும் இடம்பிடித்தார் அர்ஜுன் டெண்டுல்கர்!
IPL 2021 Sachin Tendulkar son Arjun Tendulkar Plays
2021 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கான ஏலமானது வருகின்ற 18ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்திற்காக சுமார் 1114 வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில், அதில் தற்பொழுது 292 வீரர்களை மட்டும் தேர்வு செய்து 8 அணிகளும் அறிவித்துள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதில் இந்திய வீரர்கள் மொத்தம் 164 வீரர்களும் வெளிநாட்டு வீரர்கள் 125 வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக 61 இடங்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில் 292 வீரர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்கின்றனர். இதில் அதிகபட்சமாக அடிப்படை விலையான இரண்டு கோடி ரூபாய்க்கு இந்திய வீரர்களான ஹர்பஜன் சிங் கேதார் ஜாதவ் அவர்களுடன் வெளிநாட்டு வீரர்கள் ஸ்டீவன் ஸ்மித், சாம் பில்லிங்ஸ், மொயின் அலி, ஷாகிப் அல் ஹசன், ஜேசன் ராய், மார்க் வுட் ஏலம் தொடங்க இருக்கிறார்கள்.
அதேபோல் ஒன்றரை கோடி ரூபாய் அடிப்படை விலையில் 12 வீரர்களும் ஒரு கோடி ரூபாய் அடிப்படை விலையில்ஹனுமா விஹாரி, உமேஷ் யாதவ் உள்ளிட்ட இந்திய வீரர்களும் இடம்பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏலமானது வருகின்ற 18ம் தேதி மாலை 3 மணி அளவில் சென்னையில் நடைபெற இருக்கிறது.
ஏலம் நடைபெறுவதற்கு முன்னதாகவே துரதிஷ்டவசமாக இந்திய நாட்டு வீர்ரகள் புஜாரா மற்றும் 7 வருடத்துக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட் விளையாட தயாராக இருக்கும் ஸ்ரீசாந்த் ஆகிய இருவரும் இந்த லிஸ்டில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். 20 ஓவர் போட்டி ஆடை எனக்கு தகுதியும் திறமையும் இருக்கிறது நான் நாட விருப்பப்படுகிறேன் என சத்தீஸ்வர் புஜாரா அறிவித்திருந்த நிலையில், அவரை எந்த அணியும் லிஸ்டில் கூட தேர்வு செய்யவில்லை என்பது துரதிர்ஷ்டவசமாக அமைந்துள்ளது.
அதே சமயம் இந்திய அணியின் முன்னாள் ஆட்டக்காரர் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் 292 பேர் கொண்ட ஷாட் லிஸ்டில் இடம் பெறச் செய்திருக்கிறார்கள். அவர் அடிப்படை விலையான 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரை அதிகமாக மும்பை அணி நிர்வாகம் ஏலம் எடுக்கலாம் என தெரிகிறது.
English Summary
IPL 2021 Sachin Tendulkar son Arjun Tendulkar Plays