பொளந்து கட்டிய பொலார்ட்! குவின்டன் அரைசதம்., மும்பை அணி 176 ரன்! - Seithipunal
Seithipunal


13 வது ஐபிஎல் தொடரின் 36 வது லீக் ஆட்டத்தில் இன்று ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், கே எல்  ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் ஆடி வருகின்றன. மும்பை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. 

அதன்படி மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோஹித் சர்மா 8 பந்துகளில் 9 ரன்கள் அடித்து, அர்ஷிதீப் சிங் பந்துவீச்சில் போல்டு ஆகி தனது விக்கெட்டை பறிகொடுத்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான குவின்டன் டி காக் 43 பந்துகளில் 3 சிக்சர்கள் 3 பவுண்டரிகள் விளாசி 53 ரன்களுக்கு கிரிஸ் ஜோர்டன் பந்துவீச்சில் மயங்க் அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
 
ஒன் டவுன் இறங்கிய சூர்யகுமார் யாதவ் 4 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் முகமத் சாமி பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இஷன் கிஷன் 7 ரன்களுக்கும், ஹார்த்திக் பாண்டியா 8 ரன்களுக்கு ஆட்டம் இழக்க, குருனல் பாண்டியா 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனை அடுத்து பொலார்ட் உடன் ஜோடி சேர்ந்த நாதன் கவுல்டர் நெய்ல் அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில்  6 விக்கெட் இழப்பிற்கு  176 ரன்கள் சேர்த்தது.

பஞ்சாப் அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை முகமது ஷமி, அர்ஷிதீப் சிங் தலா 2 விக்கெட்டுகளையும், கிரிஸ் ஜோர்டன், ரவி தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதனையடுத்து  177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி களமிறங்க உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ipl 2020 match 36 mi vs punjab 1st half


கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
Seithipunal