#BREAKING: டாஸ் வென்ற சென்னை சிங்கம் தோனி! அதேதான்., அட அதாங்க! - Seithipunal
Seithipunal


13 வது ஐபிஎல் தொடர் போட்டி இரு தினங்களுக்கு முன்பு தொடங்கி நடந்து வருகிறது. தற்போது வரை 3 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இன்று 4 வது ஆட்டமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதவுள்ளன.

மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் உடன் முதல் போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விழுத்தியது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது இரண்டாவது ஆட்டத்தை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இன்று மோதல் உள்ளது. இந்த போட்டி சார்ஜாவில் உள்ள மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது.

இந்நிலையில், சற்றுமுன் தாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டான் தோனி  பந்து வீச முடிவு செய்துள்ளார். இதனையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட் செய்ய களமிறங்க உள்ளது. 

இன்றைய போட்டியில் சென்னை அணியில் எந்த மாற்றமும் இருக்காது என்று தெரிகிறது. சென்னை அணியுடன் மோதக்கூடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இது முதல் ஆட்டம். முதல் ஆட்டத்திலேயே வெற்றிபெறும் ஆர்வத்தில் அந்த அணி உள்ளது. அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேனான பட்லர் இன்றைய ஆட்டத்தில் விளையாடமாட்டார்.

ராஜஸ்தான் அணியில் கேப்டன் ஸ்டீவ் சுமித், மில்லர், ராபின் உத்தப்பா, ஆண்ட்ரு டை, சஞ்சுசாம்சன், டாம்கரண், ஜோப்ர ஆர்சர் ஆகிய வீரர்கள் பெங்கேற்பார்கள் என்று தெரிகிறது. ஐபிஎல் போட்டிகளில் இரு அணிகளும் மோதியுள்ள 21 ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் 14-ல், ராஜஸ்தான் ராயல்ஸ் 7-ல் வெற்றி பெற்றுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2020 CSK vs RR TOSS


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->