மொத்தம் 17 சிக்ஸ்., கடைசி ஓவரில் சென்னை அணியை கதறவிட்ட ராஜஸ்தான்!  - Seithipunal
Seithipunal


13 வது ஐபிஎல் தொடர் போட்டி இரு தினங்களுக்கு முன்பு தொடங்கி நடந்து வருகிறது. தற்போது வரை 3 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இன்று 4 வது ஆட்டமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் அணியும் ஆடி வருகின்றன.

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டான் தோனி பந்து வீச முடிவு செய்துள்ளார். இதனையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட் செய்ய களமிறங்கியது. 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ஸ்டீவ் சுமித் ஜோடி களமிறங்கினர். இதில், ஜெய்ஸ்வால் 6 ரன்கள் எடுத்த போது தீபக் சாகர் பந்துவீச்சில் காட்டன் போல்ட் ஆகி தனது விக்கெட்டை பறி கொடுத்தார்.

இதனையடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் உடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்டீவ் சுமித் அதிரடியாக ஆட தொடங்கினார். சஞ்சு சாம்சன் 32 பந்துகளில் 9 சிக்சர்களையும் ஒரு பவுண்டரியும் அடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மிரள வைத்தார். சஞ்சு சாம்சன் 74 ரன்கள் எடுத்தபோது லுங்கி நீகுடி பந்துவீச்சில் தீபக் இடம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார். சென்னை அணி நிம்மதி பெரு மூச்சு விட்டது.

கேப்டன் ஸ்டீவ் சுமித் 47 பந்துகளை 69 ரன்கள் எடுத்து தனது விக்கட்டை பறி கொடுத்தார். ராபின் உத்தப்பா 5 ரன்கள், மில்லர் o (ரன் அவுட்), ராகுல் டெவடியா 10 ரன்கள், பராக் 6 ரங்களுக்கு ஆட்டம் இழந்தனர். 

கடைசி ஓவரை லுங்கி நிகிடி வீசினார். ஜாஃப்ரா ஆர்சர் முதல் நான்கு பந்துகளையும் சிக்சருக்கு தூக்கினார். இதில் இரண்டு நோ பந்துகள் ஆகவே பிரீ கிட் ஆனது. கடைசி ஓவரில் மட்டும் 30 ரன்கள் ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு கிடைத்தது. 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் குவித்தது. ஜாஃப்ரா ஆர்சர் 8 பந்தில் 4 சிக்சருடன் 27 ரன்கள் விளாசினார். டாம்கரண் 9 பந்துக்கு 10 ரன்கள் அடித்து இருந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ipl 2020 csk vs rr first half last over details


கருத்துக் கணிப்பு

மழையால் சென்னை தொடர்ந்து பாதிக்கப்பட யாருடைய ஆட்சி காரணம்?
கருத்துக் கணிப்பு

மழையால் சென்னை தொடர்ந்து பாதிக்கப்பட யாருடைய ஆட்சி காரணம்?
Seithipunal