#INDvsAUS :: ஜடேஜாவுக்கு புதிய சிக்கல்... டெஸ்ட் அணியில் சூரியகுமார்... இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டி கண்டுகொண்ட தொடரிலும், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாட உள்ளது. இந்த நிலையில் வரும் பிப்ரவரி 9ம் தேதி தொடங்கும் டெஸ்ட் தொடரில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியாளர்களை தீர்மானிக்கும் முக்கியமான தொடர் என்பதால் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் சூரியகுமார் யாதவ் மற்றும் விக்கெட் கீப்பர் இசான் கிஷன் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோன்று இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளார். ஆனால் இந்த தொடருக்கு முன்பு அவர் உடற்தகுதிக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சேர்க்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜஸ்பிரித் பும்ரா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணியில் இடம் பெறவில்லை. சமீபத்தில் உள்ளூர் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய ஜெய்தேவ் உனட்கட் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ளார்.

உலகக் கோப்பை டெஸ்ட் சாம்பியன் போட்டியில் இடம் பெற இரு அணிகளுக்கும் மிக முக்கியமான தொடர் என்பதால் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி:

ரோகித் சர்மா(C), கே.எல் ராகுல்(WC), சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயர்ஸ் ஐயர், கே.எஸ் பரத்(WK), இஷான் கிஷன், ரவிச்சந்திர அஸ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், சூர்யகுமார் யாதவ்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian test cricket team announced against Australia


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->