2-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் நடைபெறப்போகும் அதிரடி மாற்றங்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேகொண்டுள்ள, நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி கான்பூரில் நடைபெற்றது. இந்த போட்டி டிராவில் முடிவடைந்தது. 

முதல் போட்டி டிராவில் முடிந்ததால், 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் இரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். 

இந்நிலையில், 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் போட்டியில் விளையாடாத விராட் கோலி 2வது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளதால் புஜாரா இந்திய அணியில் இருந்து நீக்கப்படுவார் என கூறப்படுகிறது. 

விராட் கோலி இடத்தில் களமிறக்கப்பட்ட ஸ்ரேயஸ் ஐயர்  முதல் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், அவரை நீக்க வாய்ப்பு இல்லை. எனவே இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியிலிருந்து புஜாரா நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக விராட் கோலி அணியில் சேர்க்கப்படுவார் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

indian team may me one change for 2rd test match


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->