டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி; 96 ரன்கள் வித்தியாதலில் நியூசிலாந்தை வீழ்த்தி 03 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்திய இந்திய அணி..!
India won the T20 World Cup for the third time by defeating New Zealand by 96 runs in the final
10 வது டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி, 03 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.
இந்த போட்டியில் டோஸ் வென்ற இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் இந்த தொடரில் சொதப்பி வந்த அபிஷேக் சர்மா இந்த இறுதி போட்டியில் 18 பந்தில் அரைசதம் அடித்து 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார். சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி 46 பந்தில் 05 பவுண்டரி, 08 சிக்சருடன் 89 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் 25 பந்தில் 04 பவுண்டரி, -4 சிக்சருடன் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் கடைசி பந்தில், தான் சந்தித்த முதல் பந்திலேயே வெளியேறினார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்த நிலையில் ஹர்டிக் பாண்டியா 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், திலக் வர்மா 08 ரன்களிலும், சிவம் தூபே 26 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 05 விக்கெட் இழப்பிற்கு 255 என்ற இமாலய இலக்கு என்ற ரன்களை குவித்துள்ளது. நியூசிலாந்து அணி சார்பாக நீசம் 03 விக்கெட்டுகளையும், ரசின் ரவீந்திரா 01 விக்கெட்டினையும் ஹென்றி ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து தொடக்கம் முதலே சொதப்பியது. அதன்படி, அணியின் சார்பில் முதலில் களமிறங்கிய பின் ஆலன் 09 ரன்களிலும், செப்பர்ட் 52 ரன்களில் அரை சத்தம் கடந்து ஆட்டமிழந்தனர்.

அடுத்ததாக வந்த வீரர்கள் சொற்ப ரங்களில் ஆட்டமிழக்க அணியின் கேப்டன் சான்ட் னர் அதிக பட்சமாக 43 ரன்கள் எடுத்தார். இறுதியில் நியூசிலாந்து அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்து படு தோல்வி அடைந்தது. இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியில் சார்பில் அக்சர் படேல் 03 விக்கெட்டுகளும், ஜஸ்பிரித் பும்ரா 04 விக்கெட்டுகளையும் எடுத்தனர். ஹர்டிக் பாண்டியா , வருண் சக்கரவர்த்தி, அபிஷேக் சர்மா தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.
English Summary
India won the T20 World Cup for the third time by defeating New Zealand by 96 runs in the final