மகளிர் கிரிக்கெட்டில் இந்தியா அதிர்ச்சி! முதலிடம் தக்க வைத்த இந்திய வீராங்கனை 'ஸ்மிர்தி மந்தனா'...! - Seithipunal
Seithipunal


சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்ட மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான புதிய தரவரிசை பட்டியலில், இந்தியாவின் பேட்டிங் குயின் 'ஸ்மிர்தி மந்தனா' முதலிடத்தை அதிரடியாக தக்க வைத்துள்ளார்.

அண்மையில் டெல்லியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி போட்டியில், வெறும் 50 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்த மந்தனா, 32 புள்ளிகளை சேர்த்து மொத்தம் 818 புள்ளிகளுடன் அரியணையில் அமர்ந்துள்ளார்.

இது அவரது வாழ்க்கையில் பெற்ற அதிகபட்ச புள்ளி. இங்கிலாந்தின் நாட் சிவெர் (731) 2ம் இடத்தில், ஆஸ்திரேலியாவின் பெத் மூனி 3 இடங்கள் உயர்ந்து (727 புள்ளி) மூன்றாம் இடத்தில் உள்ளார்.மேலும்,பாகிஸ்தானுக்கு எதிராக 171 ரன்கள் பறக்கவிட்ட தென்ஆப்பிரிக்க வீராங்கனை தஸ்மின் பிரிட்ஸ், 15 இடங்கள் எகிறி 6-வது இடத்தை பிடித்துள்ளார்.

அதே தொடரில் அசத்தலான ஆட்டம் காட்டிய பாகிஸ்தானின் சித்ரா அமின், 10 இடங்கள் ஏறி 13-வது இடத்தில் உள்ளார்.அதுமட்டுமின்றி,இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 14-வது இடத்திற்கு (2 இடம் சரிவு) சென்றுள்ளார். தீப்தி ஷர்மா 6 இடங்கள் ஏறி 18-வது இடத்தையும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 5 இடங்கள் சறுக்கி 20-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இதில் பந்து வீச்சாளர் தரவரிசையில் இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன், ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி கார்ட்னர், மேகன் ஸ்கட் ஆகியோர் முதல் 3 இடங்களில் நிலை கொண்டுள்ளனர்.இந்திய சுழற்பந்து வீராங்கனை தீப்தி ஷர்மா 2 இடங்கள் உயர்ந்து 5-வது இடத்துக்கு வந்துள்ளார். மேலும், வேகப்பந்து வீச்சாளர் கிரந்தி கவுட் 23 இடங்கள் தாண்டி 39-வது இடத்தை பிடித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India shocked womens cricket Indian player Smriti Mandhana retained number one spot


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->