டி20 உலகக் கோப்பை: அபாரமாக பந்து வீசிய சைம் அயூப்; பாகிஸ்தானுக்கு 176 ரன்களை நிர்ணயித்துள்ள இந்தியா...!
India sets Pakistan a target of 176 runs in the T20 World Cup
10-வது டி20 உலகக் கோப்பையில் மிக முக்கியமான போட்டியாக இந்திய- பாகிஸ்தான் இடையிலான போட்டி கொழும்பு பிரேமதாச மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, முதலில், பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்தியா அணியின், தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷான் களமிறங்கினர். இதை அபிஷேக் சர்மா 'டக் அவுட்' ஆகி வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். இஷானுடன் திலக் வர்மா இணைந்தார். இஷான் கிஷன் தொடக்க முதலே அதிரடியாக ஆடி, 40 பந்துகளில், 77 ரன்கள் என அபாரமாக ஆடி, ஆட்டமிழந்தார். 27 பந்தில் அரைசதம் விளாசிய இஷான் கிஷன், 02 சிக்ஸ், 07 பவுண்டரியுடன் அரைசதம் விளாசினார்.

அடுத்ததாக அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் களமிறங்கினார். மறுபுறம் திலக் வர்மா 24 பந்துகளில், 25 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
4-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் உடன் ஹர்திக் பாண்ட்யா ஜோடி சேர்ந்தார். ஹர்திக் பாண்ட்யா முதல் பந்திலேயே கோல்டன் டக்கவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். அடுத்ததாக சூர்யா குமார் 29 பந்துகளில் 32 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த நிலையில், சிவம் தூபே 17 பந்துகளில் 27 ரன்களிலும், ரிங்கு சிங் 11 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 07 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்துள்ளது.
English Summary
India sets Pakistan a target of 176 runs in the T20 World Cup