ஆட்டத்தை தொடங்கிய கனமழை! இந்தியா-பாகிஸ்தான் போட்டி பாதியில் நிறுத்தம்! - Seithipunal
Seithipunal


2023ம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வரும் நிலையில் முதல் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. தற்போது சூப்பர்-4 சுற்று நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்தியா பாகிஸ்தானை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய வருமாறு இந்திய அணியை அழைத்தது.

இந்திய அணி தரப்பில் ஸ்ரேயரஸ் ஐயர் காயத்தால் அணியிலிருந்து விலகி நிலையில் அவருக்கு பதிலாக கே.எல் ராகுல் அணியில் சேர்க்கப்பட்டார். இதனை தொடர்ந்து தனது முதல் இன்னிசை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான ஹூப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். 

இந்திய அணி தனது முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பிற்கு 121 ரன்களை குவித்தது. ரோகித் சர்மா தனது பங்கிற்கு 49 பந்துகளில் 4 சிக்ஸர், 6 பவுண்டரிகள் விலாசி 56 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார். அவருடன் களம் இறங்கிய ஹூப்மன் கில் அடுத்த ஓவரிலேயே 58 ரன்களுக்கு வெளியேறினார். 

இதனால் இந்திய அணி அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் 3வது விக்கெட்டுக்கு விராட் கோலி உடன் காயத்திலிருந்து மீண்டு இந்திய அணியில் இடம் பெற்றுள்ள கே.எல் ராகுல் ஜோடி சேர்ந்துள்ளார்.

இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் தற்போது ஆட்டம் பாதியில்  நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மழை நின்ற பிறகு அணி தரப்பிலும் ஓவர்கள் குறைக்கப்பட்டு ஆட்டம் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரவு முழுவதும் மழை தொடரும் பட்சத்தில் நாளை ரிசர்வ் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இன்று நடைபெற வேண்டிய ஆட்டம் நாளை தொடர்ந்து நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்தியா பாகிஸ்தான் மோதிய முதல் லீக் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India Pakistan cricket match stopped due to rain


கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?Advertisement

கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?
Seithipunal
--> -->