முதல் முறை: இந்தியா- பாகிஸ்தான் இறுதி போட்டியில் பலப்பரீட்சை: வெற்றி யாருக்கு..? - Seithipunal
Seithipunal


ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 04 சுற்றில் இன்று பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் 20 ஓவரில் 08 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்து இருந்தது. அணி சார்பில் முகமது ஹாரிஸ் 31 ரன்னும், முகமது நவாச் 25 ரன்னும் எடுத்தனர்.

வங்கதேசம் சார்பில் தஸ்கின் அகமது 03 விக்கெட்டும், மெஹிதி ஹசன், ரிஷாத் ஹொசைன் தலா 02 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து 136 ரன்கள் என்ற வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் அணி, பாகிஸ்தான் பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்காமல் சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிந்தன. வங்கதேசம் அணி சார்பாக ஷமிம் ஹொசைன் அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்தார். மேலும், சைப் ஹசன் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 124 ரன்கள் மட்டுமே எடுத்து வங்கதேசம் தோல்வியை தள்ளியது. இதன்மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்று இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளது.

இதுவரை ஆசிய கோப்பை இறுதி போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியதில்லை. இதுவே முதல்முறை. இந்தியா பாகிஸ்தான் இடையே அரசியல் முறுகல் நிலை உள்ள நிலையில், இரு அணிகளும் இறுதி போட்டியில் சந்திக்கவுள்ளமை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை அதிக போட்டிகளில் வெற்றியீட்டியுள்ளது.

இந்த ஆசிய கோப்பை தொடரில் அதிக விக்கெட் எடுத்த இந்தியர் என்ற சாதனையை  குல்தீப் யாதவ் படைத்துள்ளார். இதுவரை அவர் மொத்தம் 31 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இந்தப் பட்டியலில் 33 விக்கெட்களுடன் இலங்கை மலிங்க முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India and Pakistan will meet in the final of the Asia Cup for the first time


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->