ஆசிய கோப்பை இறுதிப் போட்டி: இன்று இந்தியா-பாகிஸ்தான் பலப்பரீட்சை: வெற்றி யாருக்கு..? - Seithipunal
Seithipunal


ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் முதல் 04 இடங்களை பெற்ற இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 04 சுற்றுக்கு முன்னேறின. இந்தியா அணி இந்த சுற்றிலும் சிறப்பாக விளையாடி முதலிடம் பிடித்தது. பாக்கிஸ்தான் அணி வங்கதேசத்தை அணியை தோற்கடித்து 02ம் இடத்தை பிடித்துள்ளது.

இதையடுத்து, இன்றைய தினம் இந்தியா - பாகிஸ்தான் இடையே இறுதிப் போட்டி இரவு 08 மணிக்கு, துபாயில் உள்ள சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.

கடந்த 21-ஆம் தேதி நடந்த சூப்பர் 04 சுற்று போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை வீழ்த்தி, 06 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. வங்கதேசத்தை 41 ரன் வித்தியாசத்திலும் வீழ்த்தியது. நேற்று முன்தினம் நடந்த முக்கியத்துவம் இல்லாத போட்டியில், இலங்கையை சூப்பர் ஓவரில் சாய்த்து வெற்றிபெற்றது. சூப்பர் 04 சுற்றில், இந்தியாவிடம் தோல்வியை தழுவிய பாகிஸ்தான், இலங்கையை 05 விக்கெட் வித்தியாசத்திலும், வங்கதேசத்தை 11 ரன்கள் வித்தியாசத்திலும் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

கிரிக்கெட் உலகில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி, ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்தியா- பாகிஸ்தான் இடையே அரசியல் ரீதியில் உள்ள முருகல் நிலை, விளையாட்டு வரை ரைவெல்ரி போட்டியாக உள்ளது.

இந்நிலையில், இன்று நடக்கும் இறுதி போட்டியிலும் பாகிஸ்தானை மீண்டும் வென்று இந்தியா வெற்றி படைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்கின்றனர். அதேசமயம், இந்திய அணியுடன் தொடர் தோல்விகளுக்கு முற்றுபுள்ளிவைக்க வேண்டும் என்ற முனைப்புடன்  பாகிஸ்தான் அணி போட்டியில் பல பரீட்சை நடத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 இதனால் இன்று நடக்கவிருக்கும் ஆசிய கோப்பை இறுதி போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு சுவாரசியத்துக்கு பஞ்சம் இல்லாத போட்டியாக இருக்க வாய்ப்புண்டு.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India and Pakistan clash in the Asia Cup final today


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு


செய்திகள்



Seithipunal
--> -->