மேற்கிந்திய தீவுகள் அணிகளை மிரட்டும்  இந்திய வீர்ர்.! இவர் தானா? - Seithipunal
Seithipunal


தீவுகள் ஏ அணியில் ஸ்ரேயாஸ் அய்யர், ருதுராஜ் கெய்க்வாட், சுப்மான் கில் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால், ஆன்டிகுவாவில் நேற்று நடந்த மேற்கிந்திய தீவுகள் ஏ அணிக்கு எதிரான ஒரு நாள் ஆட்டத்தில் இந்தியா ஏ அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய ஏ அணி கைப்பற்றியது.

இந்திய அணியில் சிறப்பாக  விளையாடிய கெய்க்வாட் 99 ரன்களும், சுப்மான் கில் 69 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் 61 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணியில்  பந்துவீச்சிலும் சிறப்பாகச் செயல்பட்ட இந்திய வீரர்களில் ராகுல் சாஹர், தீபக் சாஹர், நவ்தீப் சைனி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர்.

இந்திய ஏ அணிக்கு  15 ரன்கள் தேவைப்பட்ட போது, கெய்க்வாட் ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்டு 99 ரன்னில் அவுட் ஆனார். இதில் 3 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள் அடங்கும்.
 
முதலில் பேட்டிங் செய்த  மேற்கிந்திய தீவுகள் ஏ அணிக்கு 47.4 ஓவர்களில் 236 ரன்கள் எடுத்து ஆட்டமழந்தது. 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 17 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 237 ரன்கள் அடித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா ஏ அணி வென்றது.


2-வது விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 112 ரன்கள் சேர்த்தனர். ஸ்ரேயாஸ் அய்யர் 61 ரன்களிலும், மயங்க் அகர்வால் 7 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற வைத்தனர். 33 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 237 ரன்கள் சேர்த்து இந்திய அணி வென்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india a team beat by west indies a team


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal