வெளுத்து வாங்கிய கில்.! ஒயிட்-வாஷை தவிர்க்க, நிர்ணயிக்கப்பட்ட இலக்கு.! - Seithipunal
Seithipunal



ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 

இந்தத் தொடரை ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ள நிலையில், இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் கே.எல்.ராகுல் 30 ரன்களில் அவுட்டானார். அவரை தொடர்ந்து தவானும் 40 ரங்களுக்கு வெளியேறினார். 

இதனையடுத்து களமிறங்கிய கில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 97 பந்துகளில், 130 ரன்களை சேர்த்தார். இதில் 15 பவுண்டிரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும்.

அவருக்கு உறுதுணையாக ஆடிய இஷான் கிஷன் 50 ரன்கள் எடுத்து அவுட்டானார். இந்த ஜோடி இணைந்து 140 ரன்களை சேர்த்து.

மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க, 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 289 ரன்களை எடுத்தது.

இதனையடுத்து 290 ரன்கள் எடுத்தால் ஆறுதல் வெற்றியும், ஒயிட்-வாஷ் ஆவதிலிருந்து தப்பிக்கலாம் என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கி ஆடி வருகிறது. தற்போதுவரை அந்த 5.2 ஓவர்களில், 1 விக்கெட் இழப்பிற்கு 29 ரன்கள் சேர்த்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND vs Zim 3rd onday 2022


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->