#IND Vs NZ 2021: இன்றைய போட்டியில் இதனை கவனித்தீர்களா?..! பி.சி.சி.ஐ வெளியிட்ட தகவல்.! - Seithipunal
Seithipunal


உலக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியானது நேற்று இங்கிலாந்தின் சவுத்தம்டான் நகரில் தொடங்கியது. நேற்றைய ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால், முதல் நாள் விளையாட இயலாமல் டாசும் போடாமல் தள்ளிவைக்கப்பட்டது. இதனையடுத்து, இன்று நியூசிலாந்து அணி டாஸை வென்று பீல்டிங் தேர்வு செய்தது.

இதனையடுத்து, இந்திய அணி பேட்டிங் செய்கிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் சார்பாக ஆர் ஷர்மா, எஸ் கில், வி கோஹ்லி, சி புஜாரா, ஏ ரஹானே, ஆர் பந்த், ஆர் ஜடேஜா, ஆர் அஸ்வின், ஜே பும்ரா, ஐ சர்மா, எம் ஷமி ஆகியோர் களமிறங்குகின்றனர்.

நியூசிலாந்து அணியின் சார்பாக டி லாதம், டி கான்வே, கே வில்லியம்சன், ஆர் டெய்லர், எச் நிக்கோல்ஸ், பிஜே வாட்லிங், சி டி கிராண்ட்ஹோம், கே ஜேமீசன், டி சவுதி, என் வாக்னர், டி போல்ட் ஆகியோர் களமிறங்குகின்றனர். இந்த போட்டியில் வெற்றியடையும் அணி இரண்டு வருடத்திற்கு டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நாயகன் என்பதால், கிரிக்கெட் ரசிகர்கள் இன்றைய ஆட்டத்தினை எதிர்பார்த்துள்ளனர். 

இன்றைய ஆட்டம் 3 மணியளவில் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணியின் சார்பாக முதலில் எஸ் கில் - ரோஹித் சர்மா ஜோடி களமிறங்கியுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் வீரர்கள் கருப்பு பட்டையை அணிந்து விளையாடுகின்றனர். 

இது தொடர்பாக பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில், " இந்திய அணி கொரோனா வைரஸ் தொற்று காரணமாக காலமான மில்கா சிங்ஜியின் நினைவாக கருப்பு பட்டைகளை அணிந்து விளையாடுகின்றனர் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND Vs NZ Match 2021 Match 2 nd Day Indian Team Players wearing black armbands remembrance Milkha Singhji


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->