இன்று இந்தியா - வங்கதேசம் 3வது ஒருநாள் போட்டி.. ஆறுதல் வெற்றி பெறுமா இந்திய அணி? - Seithipunal
Seithipunal


இந்தியா வங்காளதேசம் அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்திய அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

நியூசிலாந்து தொடரில் விளையாடத சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோர் வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் விளையாடி வருகின்றனர்.

இதில், 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள வங்கதேசம் அணி வெற்றி பெற்றதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது.

இந்த நிலையில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி இன்று காலை 11.30 மணி முதல் டாக்கா மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்திய அணி ஆறுதல் வெற்றியாவது பெறுமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இதனிடையே இந்திய அணியில் இருந்து கேப்டன் ரோஹித் ஷர்மா, தீபக் சஹர் மற்றும் குல்தீப் சென் உள்ளிட்ட 3 வீரர்கள் காயம் காரணமாக விலகியுள்ள நிலையில், கடைசி போட்டிககான ஒருநாள் அணியில் சுழல் பந்து வீச்சாளர் குல்தீப்யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஒருநாள் தொடருக்கான அணி விவரம்

இந்திய அணி வீரர்கள் :

ஷிகர் தவான், இஷான் கிஷான், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், KL ராகுல்(w/c), அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், ஷாபாஸ் அகமது, உம்ரான் மாலிக், ராகுல் திரிபாதி, ரஜத் படிதார், குல்தீப் யாதவ்.

வங்காளதேச அணி வீரர்கள் :

அனாமுல் ஹக், லிட்டன் தாஸ்(c), நஜ்முல் ஹொசைன் சாண்டோ, ஷாகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம்(w), மஹ்முதுல்லா, அபிஃப் ஹொசைன், மெஹிதி ஹசன் மிராஸ், நசும் அகமது, எபாடோட் ஹொசைன், முஸ்தாபிசுர் மஹ்முத், யாசன், யாசன்,  தஸ்கின் அகமது, நூருல் ஹசன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

IND vs BAN 3rd Oneday international match today


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->