12 வருடமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணியின் அபார சாதனை! - Seithipunal
Seithipunal


வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என கணக்கில் முழுமையாக கைப்பற்றி இந்தியா அசத்தியுள்ளது. 

இந்த தொடரின் இரண்டாம் ஆட்டத்தின் முதல் மற்றும் இரண்டாம் இன்னிங்சில் அரை சதம் விளாசிய ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் விருது வென்றார்.

இரு டெஸ்டிலும் சேர்த்து 114 ரன்கள் மற்றும் 11 விக்கெட் வீழ்த்திய அஸ்வின் தொடர் நாயகன் விருது வென்றுள்ளார்.

மேலும் இந்த தொடரின் வெற்றியின் மூலம், சொந்த மண்ணில் இந்திய அணி தொடர்ச்சியாக 18-வது டெஸ்ட் தொடரை வென்று புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இந்தியா பறிகொடுத்தது. 

அதன்பின்னர் இந்தியாவில் நடந்த அனைத்து டெஸ்ட் தொடர்களையும் இந்திய அணி கைப்பற்றி வருகிறது.

இடைப்பட்ட இந்த 12 ஆண்டு காலத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND v BAN test jaiswal Ashwin


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->