ஒரே இன்னிங்கிஸ்! பல சாதனைகளை தகர்த்த தென்னாப்பிரிக்க அணி! - Seithipunal
Seithipunal


உலகக் கோப்பை தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளது. முக்கியமாக ஒருநாள் உலக கோப்பை தொடர் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை தென்னாப்பிரிக்க அணி படைத்துள்ளது.

இலங்கைக்கு எதிரான இன்றைய லீக் ஆட்டத்தில் 428 ரன்கள் குவித்த தென்னாப்பிரிக்க அணி, மேலும் பல சாதனைகளை புரிந்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு,

உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த அணிகள் பட்டியல் :

2023 - தென்னாப்பிரிக்கா - இலங்கைக்கு எதிராக 428/5 
2015 - ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 417/6
2007 - இந்தியா - பெர்முடாவுக்கு எதிராக 413/5, 
2015 - தென்னாப்பிரிக்கா - அயர்லாந்துக்கு எதிராக 411/4, 
2015 - தென்னாப்பிரிக்கா - மே.இ.தீவுகளுக்கு எதிராக 408/5, 

உலகக் கோப்பையில் அதிக முறை 400 ரன்களைக் கடந்த அணிகளில் தென்னாப்பிரிக்கா - 3 முறை, இந்தியா - 1 முறை, ஆஸ்திரேலியா - 1 முறை.

மேலும், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக முறை 400 ரன்களைக் கடந்த அணிகள் பட்டியலில் தென்னாப்பிரிக்கா - 8 முறை அடித்து முதலிடம் பிடித்துள்ளது.

இந்தியா - 6 முறை
இங்கிலாந்து - 5 முறை
ஆஸ்திரேலியா - 2 முறை
இலங்கை - 2 முறை

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இலங்கைக்கு எதிராக தென்னாப்பிரிக்கா இன்று குவித்த 428 ரன்கள், இலங்கைக்கு எதிராக ஒரு அணி எடுத்துள்ள அதிகபட்ச ஸ்கோர் ஆகும். முன்னதாக கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக இந்திய அணி 414 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

மேலும், இந்திய மண்ணில் இந்திய அல்லாத ஒரு அணியால் எடுக்கப்படும் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இது என்பதும்  குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ICC world Cup South Africa new Record


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->