அப்படி போடு., இந்திய அணியுடன் இந்த அணி மோதுகிறதா? வெளியான பட்டியலால் உச்சகட்ட எதிர்பார்ப்பில் உலக ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டியில், இந்திய அணி மற்றும் பாகிஸ்தான் அணி ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளது. 

இந்தியாவில் நடக்க இருந்த டி20 உலகக் கோப்பை போட்டி கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன்-லில் வரும் அக்டோபர் மாதம் 17ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த டி20 உலகக் கோப்பை போட்டியில், தகுதி சுற்று உட்பட மொத்தம் 16 அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்த டி20 உலகக்கோப்பை போட்டி மொத்தம் இரண்டு சுற்றுகளாக நடைபெற உள்ளது. 

8 அணிகளுக்கான முதல் சுற்றில் (தகுதி சுற்று) வங்கதேசம், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நமிபியா, ஓமன், பப்புவா நியூ கினியா ஆகிய அணிகள் இடம் பெறுகின்றன.

இந்த 8 அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஆட உள்ளன. 

குரூப்-1 பிரிவில்: 

இலங்கை, 
அயர்லாந்து,
நெதர்லாந்து,
நமிபியா.
குரூப்-2 பிரிவில்: 

வங்கதேசம்,
ஸ்காட்லாந்து,
பப்புவா நியூ கினியா,
ஓமன்.

இந்த இரண்டு குழுக்களில் முதல் இரு இடங்களை பிடிக்கும் 4 அணிகள் தகுதி பெற்று, உலக கோப்பை தொடரில் இடம் பெரும்.

'சூப்பர் 12' என்று அழைக்கப்படும் இதில், மொத்தம் 12 அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. 

குரூப்-1 பிரிவில்: 
இங்கிலாந்து,
ஆஸ்திரேலியா,
சவுத் ஆப்ரிக்கா.
வெஸ்ட் இண்டீஸ்,
தகுதி சுற்றில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த இரு அணிகளும் இடம் பெறுகின்றன.
குரூப்-2 பிரிவில்:
இந்தியா, 
பாகிஸ்தான், 
நியூசிலாந்து, 
ஆப்கானிஸ்தான், 
தகுதி சுற்றில் முதல் இரு இடங்களை பிடித்த இரு அணிகளும் இடம் பெறுகின்றன.

குரூப்-2 பிரிவில் இந்தியா - பாகிஸ்தான் அணி இடம் பெற்று உள்ளதால், இந்த இரண்டு அணிகளும் மோதும் ஆட்டத்தை பார்க்க, இந்த இரு நாட்டு ரசிகர்கள் மட்டுமில்லாமல், உலக கிரிக்கெட் ரசிகர்களே காத்துக் கொண்டு இருக்கின்றனர் என்று சொன்னால் மிகையாகாது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

icc t20 world cup 2021 ind vs pak


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->