ஐசிசி வெளியிட்ட தரவரிசை பட்டியல்.. இந்தியாவை பின்னுக்கு தள்ளி முன்னேறிய பாகிஸ்தான் அணி.!! - Seithipunal
Seithipunal


ஒருநாள் போட்டியில் சிறந்த அணி, பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர், ஆல்ரவுண்டர்களின் தரவரிசைப் பாலியலை ஐசிசி வெளியிடுவது வழக்கம். அதன்படி ஒருநாள் போட்டியில் சிறந்த அணிக்கான தரவரிசை பட்டியலை  ஐசிசி வெளியிட்டுள்ளது.  

அதன்படி, பாகிஸ்தான் ஒருநாள் அணி தரவரிசை பட்டியலில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி முன்னேறி உள்ளது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரை வென்ற பிறகு பாகிஸ்தான் அணி தரவரிசையில் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடருக்கு முன்பு பாகிஸ்தான் அணி 102 ரேட்டிங்குடன் தரவரிசையில் 5-வது இடத்தில் இருந்தது. ஆனால், 3-0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணியை வென்றதால் 106 ரேட்டிங்குடன் நான்காவது இடத்திற்கு உயர்ந்தது. இந்தியா 105 ரேட்டிங்குடன் பின்தங்கியுள்ளது. 

நியூசிலாந்து அணி 125 ரேட்டிங்குடன் முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணி 124 ரேட்டிங்குடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி 107 ரேட்டிங்குடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 106 ரேட்டிங்குடன் நான்காவது இடத்திலும், இந்தியா 105 ரேட்டிங்குடன் 6வது இடத்தில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

icc odi team ranking pakistan 4th place


கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?Advertisement

கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?
Seithipunal