முதல் டி20 போட்டி.. இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்ன? கேப்டன் பாண்டியா விளக்கம்! - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, இந்திய அணிக்கு எதிராக 3 ஒருநாள், மூன்று டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் முதலில் நடைபெற்ற ஒரு நாள் தொடரில் மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது இந்திய அணி. அதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு ராஞ்சி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹார்திக் பாண்டியா பௌலிங் தேர்வு செய்தார்.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிரடியாக விளையாடிய டேரி மிட்செல் 59 ரன்களும், கான்வே 52 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட் வீழ்த்தினார். 

அதனைத் தொடர்ந்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்திய அணியின் வெற்றிக்காக கடைசிவரை தனி ஆளாக போராடிய வாஷிங்டன் சுந்தர் 28 பந்துகளில் (3 சிக்ஸர் & 5 பவுண்டரி) 50 ரன்கள்  எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் தோல்வி குறித்து பேசிய இந்திய கேப்டன் ஹார்த்திக் பாண்டியா, ஆடுகளம் இப்படி இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. ஆனால் நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாடியது. புதிய பந்திலேயே அதிகமாக சுழன்று பேட்ஸ்மன்களை திணறடித்தது.

பந்து வீச்சில் 25 ரன்கள் அதிகமாக கொடுத்து விட்டோம். இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தரின் பேட்டிங், பீல்டிங் பௌலிங் என அனைத்தையும் பார்க்கும்போது இந்தியா - நியூசிலாந்து இடையேயான போட்டியாக இல்லாமல் வாஷிங்டன் சுந்தர் - நியூசிலாந்து இடையேயான போட்டியாக இருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hardik pandya speech about India loose against newzealand


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->