ஆகாயத்தில் பறந்து, அந்தரத்தில் அசத்திய ஹார்டிக் பாண்டியா! வாயடைத்து போன ஜாம்பவான்! வீடியோ! - Seithipunal
Seithipunal


இந்தியா நியூசிலாந்து அணிகள் இடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது போட்டி இன்று மவுன மங்குனி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியில் மீண்டும் ஹர்டிக் பாண்டியா இடம் பெற்றார். 

ஆஸ்திரேலிய தொடர் முடிந்த பிறகு கேளிக்கை நிகழ்ச்சி ஒன்றில் பெண்களை தவறாக விமர்சித்ததாக தடி விதிக்கப்பட்ட ஹர்டிக் பாண்டியா இந்திய அணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனிடையே விசாரணையும் நடைபெற்று வரும் நிலையில் தடையை நீக்கி கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்ட்டது. 

இதனையடுத்து நீயூசிலாந்து தொடரில் பங்கேற்பதற்காக பறந்து சென்ற அவர் இன்றைய ஆட்டத்தில் ஆடும் லெவனில் இடம் பெற்றார். அவருடைய காம்பேக் ஆட்டம் ஆனது அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி தரக்கூடிய ஆட்டமாக அமைந்தது.  நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் ஸஹ்லின் பந்துவீச்சில் அடித்த அற்புதமான ஷாட்டை ஆகாயத்தில் பறந்து அட்டகாசமாக கேட்ச் பிடித்தார் பாண்டியா. இது பவுலருக்கான விக்கெட் அல்ல பீல்டருக்கான விக்கெட் என இந்திய பீல்டிங் ஜாம்பவான் முஹம்மத் கைப் பாராட்டியுள்ளார். அதேபோல தனது பந்துவீச்சில் 10 ஓவர்களில் 45 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். அவர் மீண்டும் ஒரு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். அணியினர்  அவர் மீது வைத்துள்ள நம்பிக்கையை அவர் காப்பற்றியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hardik pandya memorable comeback to internation cricket


கருத்துக் கணிப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துவது?
கருத்துக் கணிப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துவது?
Seithipunal