காட் ஆப் கிரிக்கெட்.. இளம் வயதில் விருதுகளை குவித்த நாயகன்.. பிறந்த நாள் வாழ்த்துக்கள் சச்சின் தெண்டுல்கர்..!! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத நாயகன்.. உலகையே திரும்பி பார்க்க வைத்த ஆட்டக்காரர், ரசிகர்களால் சச்சின் என்று அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கர். இவரது முழு பெயர் சச்சின் ரமேஷ் தெண்டுல்கர். இவர் கடந்த 1973 ஆம் வருடத்தில், ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதியன்று பிறந்தார். சச்சின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் பிறந்தார். இவரது தந்தையான ரமேஷ் தெண்டுல்கர் கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.

இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆட்டக்காரர் மற்றும் இந்திய அணியின் முன்னாள் தலைவர் ஆவார். இவர் கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டி, தேர்வு போட்டி, உலகளவிலான போட்டி மற்றும் ஐ.பி.எல் என்று அனைத்து ஆட்டத்திலும் சிறந்து விளையாடி ரசிகர்களை தக்கவைத்தவர். 

இவர் தனது 11 வயதில் இருந்து கிரிக்கெட் விளையாடி வரும் நிலையில், இந்திய அணிக்காக தனது முதல் ஆட்டத்தை பாகிஸ்தானிற்கு எதிராக கடந்த 1989 ஆம் வருடத்தில், கராச்சியில் துவங்கினர். மேலும், உலகளாவிய ஒருநாள் போட்டியில் 200 ரன்கள் குவித்த முதல் ஆட்டக்காரரும் ஆவர். 

இதனைப்போல, உலகளாவிய போட்டியில் 100 முறை நூறு ரன்கள் எடுத்த நாயகனும் ஆவார். சச்சின் தெண்டுகளாருக்கு கடந்த 2013 ஆம் வருடத்தில் பாரத ரத்னம் விருதும் இந்திய அரசால் வழங்கப்பட்டது. விளையாட்டு வீரரில் இளம் வயதில் விருதுபெற்ற நாயகனும் இவரே ஆவார். விசுடன் குறிப்பில் இருந்து 150 வருடத்தில் சிறந்த விளையாட்டு வீரரின் பேட்டியலை அறிவித்த நிலையில், அதில் இடம் பெற்ற 15 பேரில் சச்சின் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது. 

கடந்த 1994 ஆம் வருடத்தில் அர்ச்சுனா விருது, 1997 ஆம் வருடத்தில் ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது, 1999 ஆம் வருடத்தில் நான்காவது பத்ம ஸ்ரீ விருது, 2008 ஆம் வருடத்தில் பத்ம விபூஷண் விருது, 2010 ஆம் வருடத்தில் சர் கர்பீல்டு சோபர்ஸ் விருதும் வாங்கியுள்ளார். இளம் வயதில் பல விருதுகளுக்கு சொந்தக்காரராகவும் திகழ்கிறார். இவர் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக கடந்த 2013 நவம்பர் 15 ஆம் தேதி நடைபெற்ற போட்டிக்கு பின்னர் உலகக்கோப்பை போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். உலகமே அறிந்த விளையாட்டு வீரரின் பிறந்தநாளை இன்று அவரது திறமைக்கு பாராட்டுகளும், பிறந்தநாள் வாழ்த்துக்களும் தெரிவிக்க வேண்டியது இந்தியர் என்ற உணர்விலும், திறமையான விளையாட்டு வீரர் என்ற அடிப்படையில் இருக்க வேண்டும். 

Tamil online news Today News in Tamil 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

happy birthday sachin tendulkar


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->