ஆதரவாளர்களுடன் அதிரடி ஆலோசனை! தேர்தலில் தனித்து போட்டியிட தயாரா...?- சசிகலா
Action plan supporters you ready contest election alone Sasikala
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், கட்சியின் முக்கிய நிர்வாகி ஜீவிதா நாச்சியாரை, சசிகலாவை சந்தித்ததால் கட்சியில் இருந்து நீக்கியுள்ள நிலையில், இருவரிடையே அரசியல் பனிப்போர் உச்சத்தில் உள்ளது.இந்த அரசியல் சூழலில், எடப்பாடி பழனிசாமியை தீவிரமாக எதிர்த்து வந்த தினகரன், தற்போது அ.தி.மு.க - பா.ஜ.க. கூட்டணியில் இணைந்துள்ளார்.

இதனால் சசிகலா, சதுரங்கத்தில் சில காலம் ஒதுங்கி இருந்த போதிலும், அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணிக்கு எதிராக வரும் சட்டசபை தேர்தலில் களமிறங்க தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சசிகலா, தனது ஆதரவாளர்களுடன் தேர்தல் தொடர்பான ஆலோசனையை இன்று மாலை 3 மணிக்கு சென்னை போய்ஸ் கார்டன் அருகே இருக்கும் இல்லத்தில் நடத்த உள்ளார்.
இதில், தென்மாவட்டங்களில் களமிறங்கத் தயாராக இருக்கும் தனது மூத்த ஆதரவாளர்களுடன் நேரடியாக ஆலோசித்து வாக்குகளைப் பற்றிய திட்டங்களை இறுதி செய்யவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தேர்தல் தொடர்பாக ஆதரவாளர்களிடம் “நீங்கள் போட்டியிட தயாரா?” என கேட்டு, தென்மாவட்டங்களில் வெற்றிகரமாக களமிறங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனின் அ.தி.மு.க. கூட்டணியில் சேருவதை சசிகலா தரப்பு ஏற்கவில்லை என்பதும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Action plan supporters you ready contest election alone Sasikala